அன்பு மடல்
- - - - - - - - - - - - - - -
அன்புள்ள கணவா
பண்புள்ள மனைவி எழுதுகிறேன்
நீயும் அங்கே நலமா
நானோ உன் நினைவுகளோடு நலம்
நாட்டைக் காக்க புறப்பட்டாய்
நம் வீட்டை நான் காக்கின்றேன்
நீ களத்திலே நிற்பதால்
நாங்கள் வீட்டிலே
சந்தோஷமாய் வாழ்கின்றோம்
உன் ஊதியம் எங்களுக்கு தேவையில்லை
நீ நாட்டிற்கு சிந்தும் ரத்தமே தேவை
அன்பை பிரிய முடியாது தான்
சேர்ந்து பிரிவதோ அதைவிட கொடுமை
உன் நினைவாய் உன் பிள்ளைகள்
அப்பா எங்கே என்கிறது
பதில் கூறி காலத்தை கடத்த முடியவில்லை
அப்பா ஏக்கமும் தணியவில்லை
கணவன் ஏக்கமோ
எனக்கும் தாள முடியவில்லை
உன் உயிர் அங்கே நிலைத்திடாது
அறிகிறோம் நாங்கள்
உன் உடல் நாட்டை காக்கிறது
உன் உயிர் வீட்டை சுற்றுகிறது
நாட்டை காப்பதே முக்கியம் அய்யா
எங்களை நினைத்து வருந்திடாதே
பிரிவை விரும்பா அன்பு மனைவி
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Monday, 9 October 2017
மடல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment