Monday, 9 October 2017

உயிரில் கலந்தது காதல்

உயிரில் கலந்ததே காதல்
- - - - - - - - - - - - - - - - - - -
கண்ணும் கண்ணும் பேசி
மனம் இரண்டும் ஒன்றாகி
அவள் அவனையும்
அவன் அவளையும்
புரிந்தும் புரியாமலும்
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
உரசிடும்
உயிரிலே கலந்தது காதல்
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

உயிரிலே கலந்தது காதல்
___________________________
உயிரானக் காதல்
உயிரை வளர்க்கும்
பண்பானக் காதல்
மனிதனை திருத்தும்
அன்பானக் காதல்
உலகில் உயர்த்தும்
உயிரில் கலக்கும்
உணர்வாய் துடிக்கும்
உண்மைக் காதலே
என்றும் நிலைக்கும்
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment