காதல் சொல்ல வந்தேன்
--------------------------------------
காதல் சொல்ல வந்தேன்
அட உன்னிடத்திலே
கானகத்தில் விட்டு விட்டாய்
அட என்னிடத்திலே
காமம் நினைவில் இல்லையே
அன்பு மட்டுமே உண்டு
உடலை நேசிக்கவில்லை
உன்னை உயிராய் நேசிக்கின்றேன்
அன்பை கூறிட வந்தேன்
ரோசா முட்களாய் குத்திடாதே
அதிலே வரும் குருதி கூட
நமது காதல் சின்னமாய் மாறிடும்
பாசமாய் பேசிட வந்தேன்
வெறுத்து என்னை ஒதுக்கிடாதே
காதல் வேரை அறுத்து விடாதே
காதல் விதையை விதைத்திடுவோம்
உண்மையை கூறிட வந்தேன்
பொய்யாய் என்னை நேசித்திடாதே
தூய்மை காதல் நம் காதல்
நமக்கான தினம் இன்றைய தினம்
என் காதலை ஏற்றிடுவாய்
நாம் காதல் வானில் பறந்திடுவோம்
__________________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment