ஒரு குவளை விஷம்
------------------------------
துள்ளித் திரிந்திடும் மானே
புத்தகம் உள்ள கையிலே
விஷ குவளை ஏனடி
கல்வி பயில சென்றவளே
என்ன நேர்ந்தது என் மகளே
கல்விப் பாடம் கற்க சென்றாய்
மனம் பேதளித்து வந்து நின்றாய்
காம பாடம் எடுத்தது யாரோ
களவாணி யாரென்று சொல்வாயோ
பிஞ்சி மனதில் காமத்தை விதைத்தான்
உள்ளங்கையில் விஷத்தை கொடுத்தான்
ஒளி வீசிடும் எதிர்காலத்திலே
மங்கிப் போனதே நிகழ்காலமே
உன் வாழ்வை சிதைத்தது யாரடி
காமப் பசிக்கு எல்லையில்லையா
சிறியவர், பெரியவர் பார்ப்பதில்லையா
சிற்றின்பத்திற்கு ஆசை கொண்டே
சிறுமிகளின் வாழ்க்கை பாழ் ஆனதே
கொடுக்க வேண்டும் தண்டனைகளை
தண்டிக்க வேண்டும் குற்றவாளிகளை
மன்னிப்பு என்பதை மறந்து விடு
மாதுவை காக்க நீயும் புறப்படு
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment