Monday, 9 October 2017

அன்பாலயம்

அன்பாலயம்
- - - - - - - - - - - - - - - - - - - - -
பாசத்தை ஊட்டிடும்
தாயெனும் தெய்வம்
குடியிருக்கும் கோவில்
அதுவொரு அன்பாலயம்

அன்னையை தவிர
வேறு யாரால்
ஊட்ட முடியும்
அன்பை யார் ஊட்டினும்
தாயன்புக்கு ஈடாகுமோ,

இரவு பகல் அவளுக்கேது
அன்னையின் மடியிலே உறங்க
தேவலோகத்தில் உறங்கும்
சுகம் கூட அவள் அன்பிற்கு ஈடாகுமோ

ஆத்திரத்தில் அடித்தாலும்
அன்பாய் அனைத்திடுவாள்
கண்ணீர் கடலில் தத்தளிப்பாள்
பொறுமையில் பூமா தேவியே
தோற்றோடுவாள்

தவறை உடன் மன்னித்திடுவாள்
அன்பாய் திருத்திடுவாள்
தாயின் பிள்ளை அன்பைப் பார்த்து
தாரம் கூட ஏங்கிடுவாள்

மனைவியுடன் கூடல் நிகழ்ந்தாலும்
மாதுவுடன் பிணைந்து
விளையாண்டாலும் அது சிற்றின்பம்
தாயின்  அன்போ பேரின்பம்

அது ஒரு தேவாலயம்
இனிமையான அன்பாலயம்
உள்ளே சென்று விடு
அன்பாய் திரும்பி விடு
அன்னை ஆசிர்வதிப்பாள்
---------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment