Monday, 9 October 2017

ஏழ்மையின் வாசலில் பிறப்பெடுத்தாள்

ஏழ்மையின் வாசலில் பிறப்பெடுத்தால்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஏழ்மையின் வாசலில் பிறப்பெடுத்தால்
ஏக்கம் ஒன்றே வாழ்க்கையாய் மாறும்
உணவு மட்டுமே இருந்தால் போதும்
கனவுகள் காண நேரம் ஏது,
உடுத்த உடையும் இல்லையே
கந்தலாடையை கசக்கிக் கட்டினோம்.
நகரத்திற்கு நாங்கள் சென்றிட்டோம்
மகிழுந்தில் செல்லும் குழந்தைதனை
ஏக்கமாய் நாங்கள் பார்த்திட்டோம்
ஒரு வேளை உண்டால்
அடுத்த வேளை உணவேது
நாய்க்குட்டிக் கூட சொகுசாய் வாழ
கொசுக்கடியில் நாங்கள் வாழ
மழைப்பெய்தால் நனைந்திடும் வாழ்க்கை
வெய்யில் அடித்தால் காய்ந்திடும் வாழ்க்கை
விலங்குகளை காக்க நல வாரியம் உண்டு,
எங்களை காக்க யார் உண்டு,
விலங்குகளை துன்புறுத்தினால்
தட்டிக் கேட்க நாதியுண்டு
எங்கள் துன்பத்தை போக்க
யார் இங்கே உண்டு,
அரசை நம்பி வாக்களித்தோம்
எதுவும் இங்கே நடக்கவில்லை
ஏக்கமாய் வாழ்க்கை நடக்குதிங்கே.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment