நிறம் மாறும் மனிதர்கள்
-------------------------------------
பணத்திற்கு ஆசைப்பட்ட மனிதா
குணத்தை மறந்தது ஏனடா
பதவி சுகத்திற்கு ஆசைப்பட்டாய்
மானத்தை காற்றிலே பறக்க விட்டாய்
காரியம் ஆகிற வரை காலைப் பிடித்தாய்
காரியம் முடிந்ததும் காலை வாரினாய்
முன்னால் வந்தே புகழ்கிறாய்
பின்னால் சென்றே இகழ்கிறாய்
மதி நிறைந்த மனிதா
உனக்கு மதிக்கெட்டு போனதா
நீ மட்டும் வாழ்ந்திடவே துணிகிறாய்
மற்றவர் வாழ்வை நீயும் கெடுக்கிறாய்
நொடியில் மாறி விடுகிறாய்
உறுதிகளைக் காற்றில் பறக்க விட்டாய்
உனக்கான விதிகளை நீ மீறிவிட்டாய்
கொள்கையை ஏளனம் செய்திட்டாய்
பச்சோந்தி வாழவே நிறம் மாறும்
நீ மற்றவரை கெடுக்கவே நிறம் மாறினாய்
உன்னைப் போல மனிதர் பலர் உண்டு நாட்டிலே
பிடுங்கி எறிய வேண்டும் சுடுகாட்டிலே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இக் கவிதை என் சொந்த படைப்பு என
உறுதியளிக்கிறேன்
----------------------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment