_______________________________________________
அன்புக்கு மூன்றெழுத்து
அம்மாவுக்கும் மூன்றெழுத்து
இரண்டுக்கும் முடிச்சி நான்கெழுத்து
அந்த அன்பில் இருக்கிறது உயிரெழுத்து,
அம்மாவிடம் நம் உயிர்மூச்சிருக்கும்,
கொடிய மிருகத்திடமும் அன்பிருக்கும்,
தாயே நமக்கு கடவுள்
அவளையே முதலில் நீ வணங்கு
கோவில் சிலையை மதிக்கின்றாய்
பெற்ற தாயை இகழ்கின்றாய்
நீ எந்நிலைக்கு சென்றாலும்
தாயை மட்டும் மறந்திடாதே
தாய் மனதை நோகவிட்டால்
பிறந்த பலன் நிறைவேறா
தாயை முதலில் போற்றிடு
அன்பே உனக்கு முதலீடு
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment