Monday, 9 October 2017

துயரம் தரும்

துயரம் தரும்
- - - - - - - - - - - - - -
யார் கண் பட்டதோ தெரியவில்லை /
குண்டடிப்பட்டதோ அறிய வில்லை/
ஈழத்தமிழனாய் பிறந்தது தவறா/
தமிழன் பெயரை தாங்கியது தவறா/

தொப்புள் கொடி உறவு என்றீரே /
எங்களை காத்திட உ,ங்களுக்கு மனமில்லையா/
சிங்களர்களை எதிர்த்திட துணிவில்லையா/
அமைதிப்படை என்ற பெயரில் வந்தீரே /
எங்களை சின்னாபின்னமாய்
ஆக்கி சென்றீரே/

உறவாட உறவுகள் இல்லை /
படுத்துறங்க தாய் மடியில்லை /
அள்ளிக் கொஞ்ச தந்தையும் இல்லை /
தோள் சாய தோழர்(ழி)கள் இல்லை /
ஆறுதல் கூற கணவன் (மனைவி) இல்லை/

நீங்கள் வெட்டிய குழியிலே /
கொத்து கொத்தாய் வீழ்ந்தனரே /
குத்துயிரும் கொலையுயிருமாய்/
கிடப்பவர்களை காப்பது யாரோ /
எங்கும் மயானமாய்
மனித உடல்களை கண்டீரோ /

கால்கள் இன்றி, கைகள் இன்றி /
ஊனமாய் சில பேர்/
யாரும் அற்ற அனாதையாய் பல பேர் /
கண்ணீர் விடும் துயரம் தரும் காட்சி /
துயரம் தீர்க்க வருவது யாரோ/
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment