Monday, 9 October 2017

என் விழியோரம் விழுந்த காதலே

என் விழியோரம் விழுந்த காதலே
--------------------------------------------------------
நெஞ்சம் எனும் கூட்டிலே
இதயத்தை படைத்தான் கடவுள்
அந்த இதயத்திலே
காதலை வளர்த்தாள் அவளோ
மூளையின் திசுக்கள் கூட
உன் பெயரையே உணர்த்துதடி
காதில் நுழையும் தென்றலும்
உன் பெயரையே கூவுத,டி
மூக்கு உணரும் வாசத்திலும்
உன் கூந்தல் மணம் வீசுதடி
உன் காதலோ
கண்களில் தெரியுதடி
உன் விழியோ என் விழியிடம்
கெஞ்சும் கூச்சம் அறியுதடி,
நினைவில்தான் வருகிறாயே
கனவிலும் வருவதா
என்னை தினமும் கொல்வதா
நிஜமும் நீயானாய்
பொய்யும் நான் ஆனேன்
ஆண்டு் கணக்கில் காதலித்தேன்
ஏனோ என்னை ஆட்சி செய்ய மறுக்கிறாய்
மாத கணக்கில் நான் பின்னால் வர
என்னை விட்டு விலகுகிறாய்
என் விழியோரம் விழுந்த காதலே
இதற்கெல்லாம் சாட்சியடி!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment