கிணற்றுத் தவளை
- - - - - - - - - - - - - - - - -
புறம் பேசிட வேண்டாமே
வாயை கொடுத்து
கருநாகத்திடம்
மாட்டிக் கொள்ள வேண்டாமே
வானம் மட்டுமே தெரிந்திடும்
உலகம் தெரியாத இருட்டுலகிலே
வாழ்ந்திடும் நுணலாய்
பல பேர் வாழ்க்கை உள்ளதே
கிணற்று தவளையாய்
வாழ்ந்தது போதும்
எழுந்து வெளியே வாடா
நீயும் உலகில் வாழ்ந்திட வேண்டும்
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment