காத்திருந்த நேரம்
__________________
வானம் கருத்திருக்க
மேகம் இருண்டு கிடக்க
மழை வருமோ வராதோ
கானகம் சென்ற மாமனே
நீ வரும் நேரம் தெரியலையே
நான் காத்திக்கும் நேரம்
தினம் தினம் சந்திக்கும் நேரம்
சில பல நாட்களில்
காத்திருந்தேன் என் மாமனே
காலம் தாழ்த்தி வருவதேனோ
காக்க வைப்பதில் சுகம் தானோ
கன்னி நான் தனித்திருக்க
மேகக் கூட்டங்கள் என்னை சுற்ற
தேன் சிந்தும் வண்டுகள் என்னை மொய்க்க
மலர்கள் பார்த்து ஏங்குகிறது
நீ காதல் செய்யும் காட்சியைக் காண
தனித்திருந்தேன் என்றோ
மலர்களும் வாடித்தான் போகுது மாமா
விரைந்து நீயும் வந்திடுவாயோ
உள்ளம் ஏங்குதே
இதய துடிப்பு நீள்கிறதே
சுவாசம் அனலாய் வீசவே
தென்றலும் குளிராய் தழுவவே
காத்திருக்கேன் சுந்தரி நானும்
ஓடி நீயும் வந்திடுவாயோ!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment