Monday, 9 October 2017

நிலவே மலரே

நிலவே மலரே -
- - - - - - - - - - - - - - -
வீணையடி நீயெனக்கு
யாழ் கொண்டு உன்னை மீட்டினேன்
காதல் சுரமாய் நீயானாய்
இசையுமே நீயெனக்கு
பாடல் இயற்றி பாடினேன்
காதல் பாடலாய் நீ பிறந்தாய்
கவிதையடி நீயெனக்கு
பாக்களாய் தொடுத்தேன்
கவி மாலை உனக்கு அணிவித்தேன்
தென்றலடி நீயெனக்கு
காதலாய் வந்தே
உயிரூட்டிச் சென்றாயே.
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment