நீரில் இடும் கோலங்கள்
-----------------------------------
விழிகளோடு விளையாடினாய்
கண்ணோடு பேசினாய்
உதடோடு உரசினாய்
மூக்கோடு சுவாசித்தாய்
என் உயிர் நீயானாய்
உன் உயிர் நானானேன்
இதயத்தில் நங்கூரம் பாய்ச்சினாய்
காதல் எனும் சிம்மாசனத்தில் அமர்ந்தாய்
உடலில் பாதியானாய்
அன்பெனும் பாற்கடலில்
அமிர்தமாய் கடைந்தாய்
அமிர்தமதை எனக்கு ஊட்டியே
விஷமதை நீ அருந்தவே
பிரிவு தானாய் வர
உன் நினைவலைகள் என்னை வாட்ட
தேகமோ மெலிந்து போக
முகப்பொலிவும் குன்றியதே,
நீரில் இடும் கோலங்களாய்
என் மனக்கோட்டை தகர்ந்தது,
கனவுக் கோட்டை கட்டி வாழ்கிறேன்
நிலையற்ற உயிராக
பிரிவை எண்ணி வாடுகிறேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Monday, 9 October 2017
நீரில் இடும் கோங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment