கனவுகளில் கசியும் குருதி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நினைவாய் ஆனாய் நீ
கனவெல்லாம் ஆக்கிரமித்தாய் நீ
கொல்லாமல் என்னை ஆட்கொண்டாய்
இதயத்தை கிழித்தே
உள்ளேச் சென்று அமர்ந்திட்டாய்
நாடி நரம்பெல்லாம் புடைத்திட
இன்ப நினைவாய் ஆனாய் நீ
தினம் தினம் வந்து சென்றாய் கனவாய்
என் நிழலாகி போனாய்
என் மனமாகி உருகினாய்
என் உடலாக நீ மாறினாய்
நீயின்றி நானில்லை
என்றே வாழ்கிறேன்
தினமும் கனவில் வந்தாய்
கனவில் கசியும் குருதியானாய்
உடலோ வெப்பமாய் வாட்ட
மார்கழி குளிரிலும்
நினைக்கையில் உள்ளம் வியர்குதடி
அனுதினமும் உன்னை நினைக்குதடி
உண்ண மறந்த நான்
உறங்கவும் மறந்தேன்
உன்னை நினைக்கும் நான்
என்னையே மறந்து விட்டேன்
உடலில் நோயில்லை
காதல் நோயில் விழுந்து விட்டேன்
மருந்தாக நீ வர வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Monday, 9 October 2017
கனவுகளில் கசியும் குருதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment