மேடையின்றி
- - - - - - - - - - - - - -
காந்தி தாத்தா பார்க்காத மேடையடா
பாரதியார் எழுதாத கவிதையடா
வ.ஊ.சி பேசாத கொள்கையடா
அறிஞர் அண்ணா அடுக்காத தத்துவமடா
எத்தனை பேர் பேசியிருக்க
எத்தனை பேர் பாடியிருக்க
மேடைகள் இன்றியே
போர் முழக்கம் செய்தார்களே
சாதனைகளை கடந்தனரே
மேடையெல்லாம் வந்தது
ஊரே சிரிக்குது, ஊரே அழுகுது
மானமெல்லாம் காற்றிலே பறக்குது
அவன் இவனையும் இவன் அவனையும்
நாகரிகமற்ற சொற்களாலே
திட்டுவதை கேட்க முடியலையே
சகிக்கவும் முடியலையே
மக்கள் எண்ணங்களை பேச வேண்டும்
ஊழலை ஒழிக்க வேண்டும்
இலஞ்சத்தை தவிர்க்க வேண்டும்
நானே மேடையிலே பேச வேண்டும்
மேடையின்றி தவிக்கிறேன் நானே
மேடை அமைத்துத் தருவது யாரோ!
_____________ - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment