Monday, 9 October 2017

இதயம்

இதயமெனும் தடாகத்திலே
மீனாய் நீ நீந்துகிறாயே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இதயமெனும் தடாகத்திலே
மீனாய் நீ நீந்துகிறாயே
கடல் எனும் கண்ணிலே
கண்ணீராய் வழிகிறாயே
காதல் எனும் ஊற்றிலே
கவிதையாய் நீ பொங்குகிறாயே
தமிழ் எனும் அமுதுனிலே
அமுதமாய் நீ கடைந்தாயே
இன்பம் எனும் அதிகாரத்திலே
பொருளாய் நீ அமைந்தாயே
இதயம் எனும் மனதினிலே
நங்கூரமாய் நீ அமர்ந்தாயே
கூடல் எனும் ஊடலிலே
ஊர்வசியாய் நீ வந்தாயே
சொர்க்கம் எனும் தேவலோகத்திலே
தேவியாய் நீ பிறந்தவளே
சமுத்திரம் எனும் கடலினிலே
கடற்கன்னியாய் நீ வந்தவளே
கானகமான என் வாழ்வினிலே
பசுமையாய் நீயும் மலர்ந்தவளே
தெளிவில்லாத என் பாதையிலே
தெளிவாய் நீயும் வந்தவளே
கரடு முரடான என் பாதையிலே
வழிகாட்ட நீயும் வந்தாயே
என் இதயம் எனும் கோட்டையிலே
ராணியாய் நீயும் அமர்ந்தாயே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment