காதலேயென்னை காதலி
- - - - - - - - - - - - - - - - - - - - - -
தினம் தினம் உன் நினைவாலே
உடல் வருந்தி போகுடி,
மறக்கவும் முடியலையே
மறக்காமல் இருக்கவும் முடியலையே
தினமும் கனவாய் வருகிறாய்
விழித்து பார்த்தால் கலைந்து போகிறாய்
நிழலாய் வருகிறாய்
திரும்பி பார்த்தால் மறைந்து போகிறாய்
தாலாட்டு பாடிச் சென்றேன்
தென்றலாய் தழுவிச் செல்கிறாய்
விஷம் அதனை நான் உண்டேன்
அமிர்தமாய் மாறியே இம்சை செய்கிறாய்,
வானமாய் நான் மாறினேன்
மேகக் கூட்டமாய் உருவெடுத்தாய்,
சூரியனாய் நான் ஆனேன்
நிலவாய் நீ ஒளி வீசுகின்றாய்,
முன்னால் வந்தேன் முறைக்கிறாய்
பின்னால் வந்தேன் சிரிக்கின்றாய்
பேச வந்தேன் ஒடிச் சென்றாய்
காதல் செய்ய நான் வந்தேன்
அழகிய காதலே என்னை காதலி
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Monday, 9 October 2017
காதலே என்னை காதலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment