தூண்டிலுக்கு தப்பிய மீன்கள்
--------------------------------------------
#பாரதிதாசன் போட்டியாளர்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இரவு மட்டுமே தூங்கியது
ஏழை மக்களுக்கு தூக்கமேது
தூண்டிலுக்கு தப்பிய மீன்களாய்
கொத்தடிமையில் இருந்து மீண்டோம்
பகல் விழித்து கொண்டது
வறுமையோ வாட்டி வதைக்கிறது
பசியோ காதை அடைக்கிறது
பகல் ஏன் வந்தது
என்றே மனமும் கேட்டது ,
வேலை செய்கின்றோம் நாங்கள்
போதிய ஊதியம் தரவில்லை அவர்கள்
வயிற்றிலோ அனலாய் வீசியது
முகத்திலோ கண்ணீராய் வழிகிறது,
அரசு என்று ஒன்று உண்டு
ஏழைக்கு பாதகம் செய்யும் அரசு
உயர்ந்தோருக்கு சாதகம் செய்கிறது,
ஏழைகள் எண்ணிக்கையோ உயருதே
இடை தரகர்கள் அட்டகாசம் செய்கையிலே
அரசு சலுகைகள் கிடைக்கலையே
வாழ்வது யார் வீழ்வது யார் அறியலையே
மாற்றம் கேட்டோம் ஏமாற்றமே மிஞ்சியது
தட்டிக் கேட்டோம் தவறி விழுந்தோம்
கரும்புள்ளி குத்தப்பட்டோம்
கிடைத்ததும் கிடைக்கலையே
ஏக்கத்துடன் வாழ்கின்றோம்
யாரை நம்புவது
நம்பாமல் இருப்பது யாரை
மனக் குமுறல்களை கொட்டுவதெங்கே
அதனாலே கவிதையாய் வடிக்கின்றேன்
--------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment