Monday, 9 October 2017

காட்சி கவிச்சோலை

காட்சிக் கவிச்சோலை
- - - - - - - - - - - - - - - - - - - - - -
நெஞ்சோ பட படக்க
இரத்தம் துடி துடிக்க
புதிய காதல் மலர்ந்தது
கடற்கரை பரப்பினிலே
இளம் உயிராய் வீற்றிருக்க
அழகு பறவை பார்த்துச் செல்ல
கொட்டும் பணியில்
உடல் வியர்த்தது
தண்ணீர் நிறைந்திருக்க
தாகம் எடுத்தது
இயற்கை காற்று சுகமாய் வீச
மூச்சு தடுமாறியது
இவளை போல ஓடி ஆட முடியவில்லை
ஓரிடத்தில் நிலைத் திட்டோம்
ஏக்கமாய் தாவரம் பார்க்க
ஏளனமாய் பார்க்கிறது
அழகு பறவையொன்று
------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment