உயிர் தந்து போன உறவே - - - -
- - - - - உயிர் கொன்று போனதேனோ
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
உயிர் தந்து போன உறவே
அன்பை ஊட்டாமல் சென்றதேனோ
அறிவை புகட்ட நாதியில்லாத தந்தையே
உறவுகளை காட்டாமல் சென்றதேனோ
என்ன பாவம் செய்தோம்
இந்த உலகில் பிறந்திட
உங்களின் சிற்றின்ப தாக்குதலுக்கு
நாங்கள் பலியானதேனோ
ஈக்களும் கொசுக்களும் வாழும்
குப்பைத் தொட்டி தான் எங்கள் வீடோ
மிச்சம் மீந்து கெட்டுப் போன
சோறு தான் எங்கள் உணவோ
வீதியில் விட்டுவிட்டீர்
தெருத் தெருவாய் அலைகின்றோம்
உண்ண உணவில்லை
உடுத்த உடையும் இல்லை,
குடியிருக்க வீடும் இல்லை,
பாசம் காட்ட ஆளில்லை
ஏக்கத்தில் அலைகின்றோம்
மோகம் செய்த பிழை
காமத்தின் மிச்சம் நாங்கள்
விதைத்தவர்கள் சுகமாய் வாழ
விதைகள் நாங்கள்
துன்பத்தில் உழல்கின்றோம்
எங்களை படைக்க நினைத்த இறைவா
உயிர் கொன்று போனதேனோ
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Monday, 9 October 2017
உயிர் தந்து போன உறவே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment