காட்சியும் கானமும்
- - - - - - - - - - - - - - - - - - -
பண்பாடு எங்கள் உயிர் மூச்சு
பாரதம் எங்கள் சுவாசம்
தமிழே எங்கள் உயிர்
வீரமே எங்கள் பாரம்பரியம்
கையேந்திட மாட்டோம்
கையேந்தியவரை கை நனையாமல்
அனுப்பிடமாட்டோம்
தமிழுக்கே தலை வணங்குவோம்
தலை நிமிர்ந்தே நடந்திடுவோம்
எங்கள் நாடு, எங்கள் மக்கள்
வாழ்ந்திட உயிரையும் கொடுப்போம்
உயிரை எடுத்திடவும் அஞ்ச மாட்டோம்
அடிபணிவது தமிழுக்கே
உயிரும் தமிழுக்கே
உடல் எங்கள் மண்ணுக்கே
ஆடவர் மட்டுமே வீரனா
களத்திலே வாள் எடுத்து சுழற்றிய
வீர தமிழச்சி பலர் உண்டு
மாது ஒருத்தி நாட்டை காக்க புறப்பட்டாள்
தன் கணவனை இழந்தால் முதல் நாளில்
பசும் பாலகனை மறுநாள்
போருக்கு அனுப்ப துணிந்தாள்
தடுத்தவர் பலருண்டு
கணவனை இழந்த சோகம் காணவில்லை
நாதியற்ற பெண்ணாய் இருந்தும்
நாட்டுப் பற்று அவளை உறுத்த
தன் மகனை அழைத்தாள்
தலைவாரினாள்,
உச்சி முகர்ந்தாள்,
வாளை கையில் திணித்தாள்
போருக்கு அனுப்பி வைத்தாள்
போர் முடிந்தது,
வீரர்கள் திரும்பினர்
மகனை காணலையே
எங்கே என் மகன்
வினவினாள் தாய்
பாலகனை அனுப்பிய கல் நெஞ்சமே
புறமுதுகிட்டு ஓடியிருப்பான்
வீரர்களின் சொற்கள் அம்புகளாய் தைக்க
ஓடினால் போர்க்களம் நோக்கி
தன் மகனை கண்டாள்
ஆனந்த கூத்தாடினாள்
தன் மகன் மார்பில் தைத்த அம்புகளால்
தைத்துக் கிடக்க
வீரப்பால் ஊட்டிய அன்னையவளோ
தன் மகன் வீரன் என
மற்றோர் சொல்ல கேட்டாள்
வாரியெடுத்து அணைத்தாள்
வீரம் பாய்ந்த தமிழச்சி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - .
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment