Monday, 9 October 2017

தூரத்து வெளிச்சம்

தூரத்து வெளிச்சம்
-----------------------------
தூரத்து வெளிச்சமாய் நீயிருக்க
வெற்றியே உன்னை அடைந்திட
நான் ஓடி வர,
தன்னந்தனி காட்டுக்குள்ளே
சிக்கிக் கொண்டே போராடினேன்,
உன்னை அடைய முடியவில்லையே,

போராட்டமே வாழ்க்கை ஆனது
தோல்வியே நிரந்தரம் ஆனது,
வெற்றியை நோக்கி பத்து படிகள் ஏற
பதினைந்து படிகள் தவறி விழுந்தேன்

முயற்சி என்ற ஒன்றை மட்டும் ஏந்தி
தன்னம்பிக்கையை மூலதனமாய் கொண்டு
களத்தில் நான் இறங்கி விட்டேன்
வெற்றி என்ற வெளிச்சம் தூரத்தில் தெரிய
எட்டாக் கனியல்ல,
கைப்பிடி தூரத்தில் இருக்கையிலே
எதிர்நீச்சல் நானும் நீந்தையிலே
தோல்வியை கண்டு அஞ்சிட மாட்டேன்,

அதனையே அனுபவமாய் ஏற்று
மீண்டும் மீண்டும் போராடியே
வெற்றிதனை அடைந்திடுவேன்,
கலங்கரை விளக்கமாய் ஒளிர்ந்திடுவேன்,
எதிர்காலம் தூரத்தில் வெளிச்சமாய் தெரிய
விரைந்து விவேகமாய்  சென்றால் வென்றிடலாம்.
__________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment