Monday, 9 October 2017

வண்ணக் கலையழகு

வண்ணக் கலையழகு
- - - - - - - - - - - - - - - - - - -
பாரதிதாசன் போட்டியாளர்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கலைகளில் சிறந்தக் கலை சிற்பக் கலை
சேரன், சோழன் பாண்டிய மன்னர்கள்
போற்றி பாதுக்காத்தக் கலை
இயல், இசை நாடகம்
சேர்ந்ததே தமிழின் கலை

தன் வாழ்க்கையை சிற்பமாய் வடித்தான்
பிடித்தவர்களை உளியால் செதுக்கியே
நினைவுச் சின்னமாய் ஆக்கினான்,
காலத்தால் அழியாதக் கலைகள் பல உண்டு
தமிழகத்திலோ நிறைவாய் உண்டு

சாட்சிக்கு தஞ்சைப் பெரியக் கோவில்
ஒரேக் கல்லில் செதுக்கிய நந்தியும்,
எந்தப் பக்கமும் நிழல் படரா கோபுரமும்
கண் கவரும் கலையல்லவா.

மதுரைக்கு மீனாட்சி
காஞ்சிக்கு காமாட்சி
அழகாய் சிலைதனை வடித்தே
உயிர்க்கொடுத்த அந்த
இறைவனுக்கும், இறைவிக்கும்
உயிர்க்கொடுத்தான் சிற்பி,
பார்க்க பார்க்க பரவசம்
தன் தாயைப் பார்க்கும் பரவசம்
மெய்மறந்தே போய் விடுவார்,

மாமல்லபுரம் சிற்பங்களை கண்டதுண்டோ
கடல் எழில் கொஞ்சும் கலைகள்
முன்னோர் கலைக்கோர் எடுத்துக்காட்டு
வானுயர்ந்த கோபுரங்கள் பல உண்டு
கற்பனைக் காட்சிகள்  நிறைய உண்டு
வாழ்க்கை ரகசியம் கற்றிடலாம்
ஆயக்கலைகளை கண்டிடலாம்
------------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்



No comments:

Post a Comment