Monday, 9 October 2017

மவுனமாய் அழுகிறேன்

மௌனமாய் அழுகிறேன் மனதினுள்
---------------------------------------------------------
உண்மையாய் பூத்த உண்மை நேசம்
மனதில் எடுத்த உரிமை சபதம்
நேசித்த உயிர் எங்கே போனது
கொள்ளாமல் கொன்று எங்கே சென்றது

உடல் மட்டும் பிணமாய் நடமாட
உயிர் மட்டும் உன்னை நாட
கலங்கிய கண்ணில் தண்ணீர் இல்லை
கட்டுப்படாத மனம் எங்கே சென்றது

பழகிய நாட்கள் நினைவில் வர
மறக்க நினைத்தும் தடுமாறினேன்
மறதியிலும் உன் நினைவில்
கனவுகள் கண்டேன் நான்
என் நினைவுகள் ஏன் அங்கே சென்றது

பழகிய வரை இனித்ததோ
பழகிய பின் புளித்ததோ
மனம் புண்பட்டு பாழாய் போக
வாழ்க்கையும் இங்கே தடுமாறியதே

மோகம் மட்டுமே காதலா
காமம் மட்டுமே அதன் உச்சமா
உடல் மட்டுமே ஆணின் தாகமா
விடையில்லாமல்
மௌனமாய் அழுகிறேன் மனதினுள்
---------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment