பக்கம் வருகிறாய்
தூரமாகிறது வெட்கம்
------------------------------------
மழைச்சாரலில்
குடையெடுத்து நான் வந்தேன்
மழையில் நனைகிறது மயிலொன்று
குடை பிடிக்க பக்கம் சென்றேன்
வெட்கம் தூரமாகி
கண்கள் மட்டுமே பேசிட
மழையின் சத்தத்தை மீறிய
மெளனமான தருணங்கள்
அழகு மயிலை பார்க்கின்றேன்
வெட்கி தலை சாய
உதடுகளில் மழைத்துளிகள்
காமன் படைத்த அழகியை
சாயம் பூசா உதடுகள்
அவளின் அழகை மெருகூட்ட
வண்ண இதழ்களில்
என்னை மறந்தேன்
கவ்வி சுவைத்திட
கனவு கண்டேன்
நினைவு திரும்பிட
வெட்கத்தில் தூரமாய் சென்றாள்
-----------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment