Monday, 9 October 2017

மலர்கள் பேசினாள்

மலர்கள் பேசினாள்
----------------------------
தாவணி அணிந்த புதிய மலரே
தீண்டாமல் தீண்டினாய்
நோகாமல் நோகிறாய்
பார்க்காமல் பார்க்கிறாய்
கேட்காமல் கேட்கின்றாய்
உரசாமல் உரசினாய்
மனதிலோ தீ மூட்டி சென்றிட்டாய்
நினைவிலே உனை விதைத்திட்டாய்
கனவிலே வந்து தொல்லை செய்கிறாய்
அழகான ராட்சசியே
என்னை ஆட்சி செய்ய வந்தவளே
எனை தலையில் ஆடினாய்
உன் கூந்தல் மனதில் மயங்கினேன்,
என் மணமும் உன் மணமும் இணைந்ததே
ஆடவரை வெறிக் கொள்ள செய்ததே
அழகிலே நாங்களே உவமை
உங்கள் கூந்தலிலே சூடையிலே
கிடைக்கின்ற பெயரே பெருமை
நாணம் கொண்டு போகிறோம்
உங்கள் அழகை மெச்சியே
அழகிய மாதுவே
அடுத்த பிறவியில் நான் ஆடவனாய்
பிறந்திட வேண்டும்
உன்னை அள்ளியே சூடிட வேண்டும்

No comments:

Post a Comment