Monday, 9 October 2017

உன்னோடு நானிருந்தால்

உன்னோடு நானிருந்தால்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
உன்னோடு நானிருந்தால்
இந்த உலகமும் எனக்கு வசப்படும்
உன் உயிரில் நான் கலந்திருந்தால்
அந்த வானமும் கைக்கூடும்

என் நினைவில் நீ நிலைத்திருந்தால்
என் மனமும் மகிழ்ந்திடும்
என் கனவில் நீ வந்தால்
என் காதலும் வசந்தமாகும்

நெஞ்சில் நீயும் நிலைத்திட்டால்
என் இதயமும் பலப்படும்
விழியில் நீயோ அகப்பட்டால்
விழிகளை இமை காக்கும்
உன்னை நான் காப்பேன்
தென்றலாய் வந்திடுவாய்
தெம்மாங்கு பாடிடுவேன்

என் நிழலாய் நீ வந்தால்
அந்த நிலமும் என்னைக் காக்கும்
நீராய் நீ வந்தால்
அதில் அலையும் முகமாவேன்

என் வாழ்வில் நீயும் வந்தால்
வாழ்க்கை சிறக்கும்
என்னோடு நீயிருந்தால்
இந்த உலகும் கண்டு வியக்கும்
_______________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment