சொர்க்கமாகும் பூமி
- - - - - - - - - - - - - - - - - -
மழையோ பொழிய வேண்டும்
நதியில் தண்ணீராய் ஓட வேண்டும்,
விவாயம் செழித்து வளர வேண்டும்,
பஞ்சமெல்லாம் காற்றிலே பறக்க வேண்டும்
பஞ்சம் பசி நீங்கிட வேண்டும்
உணவு தன்னிறைவாய் கிடைத்திட வேண்டும்
கையேந்தா வாழ்க்கை வாழ வேண்டும்
தூய்மையான ஆடை கிடைத்திட வேண்டும்
இன்பங்கள் முழுதாய் கிடைத்திட வேண்டும்
துன்பங்கள் விரைவில் அகன்றிட வேண்டும்
கூட்டுக் குடும்பங்கள் மீண்டும் வேண்டும்
குழந்தைக்கு அன்பு மிகுதியாய் கிடைத்திட வேண்டும்
இனவாதம் அழிய வேண்டும்
மொழி வாதம் களைய வேண்டும்
தீவிரவாதம் ஒழிய வேண்டும்
தீவினை யாவும் நாட்டில் களைய வேண்டும்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்,
ஊழல், இலஞ்சம் இல்லா நாடு வேண்டும்
பூமியே சொர்க்கமாக வேண்டும்
கடவுளே நீயும் அருள் தர வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment