செந்தமிழ்ச்சாரலில் செய்த கூடு,
என் கற்பனை கவியின் வீடு,
மாசற்றவர் அமைத்த கோடு,
என் போன்ற கவிகளின் கூடு,
சாரல் வீசும், கவிகளின்மனமும் - வீசும்.
அமுதமாய் இனித்திடும் - தமிழ்தேனாய் சுவைத்திடும் வகையில் படைத்திடும்,
கவியரசர்களும், கவியரசிகளும் சங்கமித்திடும் செந்தமிழ்ச் சாரலின் கடல்.
இது வற்றாத ஊற்றினால்,
தெவிட்டாத தேனினாள்,
அருட்சுவை, பொருட்சுவை ஊட்டி - குற்றம்
குற்றமே என வாதிடும் நடுவர்களின் சபை
நாவினில், நினைவதில்
சரஸ்வதி குடியிருக்கும் கோவில்,
வள்ளுவனையும், கம்பனையும்
கடைந்தெடுக்கும் கடல் அது.
பன்னிரு செந்தமிழ் நாடுகளையும்
இணைத்திட்ட களம்,
அதுவே தமிழின் பலம்.
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே,
செந்தமிழ்ச் சாரல் செய்த கூட்டினிலே,
பைந்தமிழும் செம்மொழியும் - தமிழன்னை
செந்தமிழ்ச் சாரலின் வீட்டினிலே!
அன்புள்ள தமிழன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment