புரட்டும் பக்கங்களில் எல்லாம் காதலே -
- - - - - - - - - - - - - - - - -
இலட்சியங்கள் வீணானது
தீராத ஆசைகளினாலே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பாரதிதாசன் போட்டியாளர்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
புரட்டும் பக்கங்களில் எல்லாம் காதலே
அவள் நினைவுகளின் சங்கமம்
அவளின் வர்ணனைகள்,
அழகு தோரணைகள்,
பேசிய பேச்சுக்கள்
மறக்காமல் எழுதி வைத்தேன்,
நடக்கும் நடையழகு
சிரிக்கும் பல்லழகு
பார்க்கும் கண்கள் அழகு
வளையும் இடு்ப்பும் அழகும்
நடந்திடும் கெண்டைக் கால்கள் அழகு
பாக்களாய் தொடுத்திருந்தேன்
ஊர் கூடி தேரை பார்ப்பது போல்
கட்டிளங்காளைகள் பார்த்திடும் காட்சிகள்,
நிலவொளியாய் பிரகாசிப்பாள்
நானோ வண்டு போல கருத்திருப்பேன்
என்னை ஏன் விரும்பினாள் என்றே
அந்த நிலவை நானும் கேட்டதுண்டு
மறக்காமல் குறிப்பில் பதித்ததுண்டு
அவள் பதித்த கால் தடங்களை
முகர்ந்து பார்த்து சுவாசித்தேன்
என்றும் அவள் நினைவாய்
அவள் வருடியதால்
உடலில் தண்ணீர் ஊற்றிட மறந்திட்டேன்
எங்கே அவள் தடம் அழிந்திடுமென்று
அதனையே கவிதையாய்
நான் பதிவிட்டேன்
உண்மையாக நேசித்தேன்
உயிராய் சுவாசித்தேன்
குடும்பமதை மறந்தேன்
நெஞ்சில் தாக்கிய மின்னலாய்
என்னை விட்டு பிரிந்தாள்
கனவுக் கோட்டை கலைந்தது,
இலட்சியங்கள் வீணானது
தீராத ஆசைகளினாலே
----------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment