கானம் பாடும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - -
நிலாவை பாடினோம்
சூரியனை தாலாட்டினோம்
அழகு மயிலாய் ஆடினோம்
குயில் போல கூவினோம்
பெண்ணிற்கு பா வடித்தோம்
கவிதை மழையாய் பொழிந்தோம்
சிலைக்கு எல்லாம் செய்யுள் வடித்தோம்
சிங்கத்திற்கே வீரத்தை புகட்டினோம்
சல்லிக்கட்டில் கவிதையோடு மல்லுக்கட்டினோம்,
கிராம கவிதையை மீட்டெடுத்தோம்
நாட்டுப்புற கலையை பாட்டாய் பாடினோம்
நிலா முற்றத்தில் இணைந்திட்டோம்
தமிழன்னையை மீட்டெடுத்தோம்
பாமாலை அணிவித்தோம்
சாதி கொடுமையை தகர்த்தெறிந்தோம்
ஆண் பெண் பேதம் மறந்தோம்
ஒன்றாய் இணைந்தோம்
தமிழராய் வாழ்கிறோம்
உணர்வில் ஒன்றியே
கானகத்தில் எழுதினோம் அதுவே
கானம் பாடும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment