தித்திக்கும் தீ
--------------------------
அமைதியான மனதிலே
தீ மூட்டி சென்றாயே
மனமோ வேகுதடி
வெந்து தணியுதடி
உன்னைப் பார்த்தே உருகினேன்,
சூரியனைப் பார்த்தால்
பனி விலகும்
நிலவொன்றைப் பார்த்தேன்
மனதில் தீயாய் பரவ
இன்பரசம் ஊற்றெடுக்க
அமிர்த தேனை
பருகிட நினைக்கின்றேன்.
தித்திக்கும் தீயானாய்
தீயினால் இன்புற்றேன்,
அமிர்த விஷமானாய்
பருகி களிப்புற்றேன்
என்னை விட்டு பிரிந்தாலும்
என் காதல் உண்மையடி
உண்மை காதல் சாகாதடி,
மறு ஜென்மம் எடுத்தேனும்
உன்னை கரம் பிடிப்பேனடி!
---------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment