- - - - - - - - - -
அம்மா, உறக்கம், அக்கறை,பசி,மடி, இறுதி
_________________________________
#அம்மா என்றோர் உயிருண்டு
அந்த உயிர் இல்லையேல் நாம் ஏது
அம்மாவை வணங்காத உயிர்களில்லை
அவளின்றி எந்த உயிரும் பிறந்ததில்லை,
அவளன்புக்கு எதுவும் ஈடில்லை
#உறக்கம் அதனை தொலைத்தாள்
கண்விழித்தே காத்தாள்
ஈ, எறும்பெல்லாம் கடிக்காமலே
நம் மீது #அக்கறை கொண்டே
ஊண் உறக்கமின்றி காத்திட்டாள்
குழந்தையின் தேம்பல் கண்டே
#பசி எடுத்ததறிந்தே
#மடியினில் தூக்கி வைத்தே
சோறூட்டி தாலாட்டு பாடிடுவாள்
#இறுதி மூச்சில் அவள் கண்டதோ
முதியோர் விடுதியல்லவா!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment