ஒரு பூவின் கோபம்
- - - - - - - - - - - - - - - - - - - -
நீதி தவறியதால்
அன்று ஒரு பூ வெகுண்டெழுந்தது
தன் கணவன் கள்வன் அல்ல
என்று நிருபித்தே மதுரையை எரித்தது
பூ ஒன்று மென்மையானது
பூவே உனக்கு கோபம் வந்தால்
நெற்றிக்கண் திறந்திடுமே
பூவும் பெண்ணும் ஒன்றல்லோ
பூவின் மணமும்
பெண்ணின் மனமும் மென்மையன்றோ
பெண் அவளும் பூ அவளும்
பூமா தேவியின் மகள்களோ
பொறுமையோ நிறைய உண்டு
பொறுமைதனை இழந்தால்
எரிமலையும் வெடிக்கும்
பூமியும் குலுங்கும், கடலும் கதறும்.
ஜான்சிராணி வால் சுழற்ற
எதிரிகள் பலர் மாண்டனரே
பூவிற்கு மணம் தான் உண்டு
என்ற நினைப்பே தவறாக
பூ ஒன்று வெகுண்டெழ
ஆடவர் பலர் புறமுதுகிட்டு ஓடினரே
சாது மிரண்டால் காடு கொள்ளாது
பூ மிரண்டால் நாடே தாங்காது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment