Monday, 9 October 2017

நீலக் குருதி

நீலக் குருதி
- - - - - - - - - - -
துன்பங்களை காண
முடியவில்லை
பட்ட துன்பங்களை
எண்ணி மாளவில்லை
மனக் குமுறல்களை
அடக்க தெரியவில்லை
எழுதி குவிக்கின்றேன்
நீலக்குருதி தீர

அநியாயத்தை காண
முடியவில்லை
அக்கிரமங்களை பொறுக்க
முடியவில்லை
தட்டிக் கேட்க இயலவில்லை
காகிதத்தில் எழுதி
குவிக்கின்றேன்

ஊழலின் வேர் பெருத்துவிட்டது
கிளையை மட்டும் வெட்டி பயன் ஏது
வேரை அறுக்க வேண்டாமா
நீதி தேவதை கையிலே இருக்கிறதே
நீலக்குருதியால் அழித்திடலாமே

கொலையும் கொள்ளையும் நடக்குதே
தடுத்திட வழியும் உண்டிங்கே
அரசின் ஒப்பம் போதுமே
அதிலே நீலக் குருதி பேசிடுமே
சட்ட ஒழுங்கை காத்திடுமே

கடமையை செய்திட வேண்டுகிறேன்
லஞ்சத்தை தவிர்க்க வேண்டுகிறேன்
நியாயம் தர்மம் நிலை நாட்ட வேண்டும்
அநியாயத்தை ஒழிக்க வேண்டும்
அதற்கே நீலக் குருதி பயன்பட வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment