Monday, 9 October 2017

என் உயிர் பாதி நீயடி

என்னுயிரில் பாதி நீயடி
- - - - - - - - - - - - - - - - - - - -
நித்தம் நித்தம் நேசிக்கின்றேன்
அனுதினமும் ரசிக்கின்றேன்
கண்ணால் கவர்ந்தாய் என் மானே
காதல் மொழிகள் பேசுகின்றாய்

துக்கமாய் உன்னிடம் வந்தேன்
ஆறுதலாய் நீயிருந்தாய்
சோகமாய் நான் வந்தேன்
தோளில் சாய்ந்திட இடம் தந்தாய்

களைப்பாய் நான் வந்தேன்
களைப்புகள் தீர முத்தமிட்டாய்
பிடித்ததை எல்லாம் செய்கின்றாய்
உனக்கு என்ன நான் செய்திட்டேன்

சுதந்திரமாய் சுற்றி திரிந்த பறவை நீ
என் வேலிக்குள் வந்து அகப்பட்டாய்
உன் வலிகளை எல்லாம் மறந்திட்டாய்
என் வலிகளையும் சேர்த்தே சுமக்கின்றாய்

என் இன்பம் முழுவதும் உன்னுள் கலக்க
என் துன்பமும் உன்னை வருத்த
எனக்கென பிறந்த வெள்ளி நிலவே
என்னுயிரில் பாதி நீயடி
- - - - - - - - - .--------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment