Monday, 9 October 2017

கையோடு கைகோர்த்து

கையோடு கைக்கோர்த்து
- - - - - - - - - - - - - - - - - - - - -
நிலாவும் சூரியனும் இணையுமோ,
பூமிதனில் இணைந்திடும்
சூரியனான ஆணும்
நிலவாகிய பெண்ணும்
இணைந்தால் காதல் வந்துவிடும்

பெண்ணான அவளோ நாணம் கொண்டாள்
ஆணாகிய அவனோ ஏக்கம் கொண்டான்
கண்கள் தானாய் பேசியது
இதயங்கள் இணைந்தே காதலானது,

முதல் பார்வையில் பூத்திடும் பூ
இருவரையும் இணைத்திடும் பூ
கண்களால் பேசிடும் காதல் பூ
பூக்கள் இரண்டும் இணைந்ததே
மனதால் இணைந்து
காதல் வானில் பறந்தே
காதல் ரசத்தை பருகியதே.

ஒருவரை ஒருவர் புரிந்தே
கையோடு கைக்கோர்த்து
நீயில்லையேல் நானில்லை
நானில்லையேல் நீயில்லை
வசனம் எல்லாம் பேசியே
இருமனம் ஒன்றாய் இணைய
இல்லற வாழ்க்கை ஆரம்பம் ஆனதே
அன்புக் காதலால்
இரு உறவுகள் இணைந்ததே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment