காட்சியும் கானமும்
- - - - - - - - - - - - - - - - - -
திருமணமாம் திருமணம்
இருமனம் இணையும் திருமணம்
இரு உறவுகள் கூடும் திருமணம்
திருமணத்தை செய்து பார்
புது வீட்டைக் கட்டிப் பார்
தெரியும் அப்போது
வலி என்னவென்று
பெரியோர் கூறுவதை கேட்டதுண்டோ,
பெண்ணும் ஆணும் பார்க்க வேண்டும்
பெண் பார்க்கும் படலம்
கண்ணும் கண்ணும் பேச வேண்டும்
முதல் பார்வையில் பிடித்துப் போக
கை கூடுதே திருமணம்
சாதகம் பொருத்தம் பார்க்க வேண்டும்
உறவுகள் கூடி பேச வேண்டும்
திருமண விழா வந்ததுமே
வெற்றிலைப் பாக்கு மாற்றியே
சம்பந்தம் கலந்து கலக்க வேண்டும்
அய்யர் மந்திரங்களை ஓத
மணமகன் மணமகள் கழுத்தில்
தாலியை கட்ட
ஒருவனுக்கு ஒருத்தி என்றே
வேலியும் அங்கே போட
அம்மி மிதித்து அருந்ததிப் பார்த்து
வட்டார விளையாட்டை விளையாட
மாப்பிள்ளையும் பெண்ணும்
சோறூட்டும் காட்சியை
தேவர்களும் கண்டதில்லையே
காதல் திருமணம் செய்தவர்களோ
சில வருடங்களில் பிரிந்தனரே
ஒரே முறையில்
கண்டும் காணாமலும்
பெண் மாப்பிள்ளையை பார்க்க
மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்க
கை கூடிய திருமணம்
ஆயிரம் காலத்து பயிராய் வாழ்கிறதே,
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment