Monday, 9 October 2017

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் புன்னகையே

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் புன்னகையே
- - - - - - - - - - சுவாசமாய் நீ வருவாயா
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் புன்னகையே
உன் முகத்தில் புன்னகை தவழ
என் கவலையெல்லாம் மறந்ததடி,
வருத்தமெல்லாம் கலைந்ததடி
மனம் மகிழ்வாய் ஆனதடி

உன் பிஞ்சு விரல்களின் தழுவல்
குளிர்கின்ற பனியின் துளியாய் ஆனதடி
கள்ளம் கபடமற்ற சிரிப்பும்
மழலை கொஞ்சும் பேச்சும்
எங்கும் கிடைக்காத செல்வம்
மழலைச்செல்வம் கிடைக்காதோர் ஏங்கிடுவர்

நீயோ குழந்தை மற்றோர் பார்வைக்கு
எனக்கோ நீ தெய்வ மகளம்மா
மலடி  பட்டத்தை நீக்கியவளே
தாய்மை பட்டத்தை தந்தவளே
அம்மா என்றழைத்திடும் நிலவே
அவ்வார்த்தையை கேட்டிட
தவமின்றி கிடைத்த வரமே

என் உலகமும் நீயே
என் குல தெய்வமும் நீயே
என் அன்பில் உருகிடுவாய் மானே
உன்னை வளர்ப்பது என் கடமைதானே
நமக்குள் பிரிவில்லை தேனே
என்றும் என்னுடன்
சுவாசமாய் நீ வருவாயா
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment