Monday, 9 October 2017

நேசமே சுவாசமானால்

நேசமே சுவாசமானால்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
நேசமே சுவாசமானால்
வாழ்க்கை முழுவதும் இனித்திடுமே
அவள் நினைவே
என் நினைவாய் மாற
இதயமும்  வலுவாகியதே

உறக்கத்திலும் உன் நினைவே
உண்ணும் போதும் உன் நினைவே
நடக்கும் போது, சிரிக்கும் போது
எந்த செயலிலும் உன் நினைவாலே
சுவாசமாய் சுவாசிக்கின்றேன்
கனவாய் காண்கின்றேன்
நினைவாய் வருவதனால்,

நீயே எனக்கு மணவாட்டி
நானே உனக்கு மணவாளன்
எழுதி வைத்தான் தேவன் அன்று
வாசிக்கின்றேன் நானோ இன்று

நீ அன்பை பொழிகிறாய்
நான் காதலை பொழிகின்றேன்
இரு பொழிவும் சாரலாய் பொழிய
காதலர் தினம் நனைகிறதே
உன் நேசமே என் சுவாசமாய் மாறியதே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment