Monday, 9 October 2017

'ஆ .

'ஆ' முதலெழுத்துக் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆறுபடையப்பனே, அருள்வாய் நீயே
கானகத்தில் மரங்கள் இல்லை
தரணியில் விவசாயம் இல்லை
ஆற்றிலே தண்ணீரை காணவில்லை
பருவ மழையும் பொழியவில்லை
வீட்டிலே உணவும் இல்லை
மனிதன் செய்த தவறுகளே காரணமாம்
பொறுத்தருள்வாய், அருள் தருவாய் நீயே
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

'ஆ' முதலெழுத்துக் கவிதை

ஆகாயத்தில் அமைதி கண்டேன்
ஆறுபடையப்பனின் முகமும் கண்டேன்
ஆவேசமாய் நானும் கேட்டேன்
ஆயுளை கூட்ட வேண்டுமென்றேன்
ஆவிகளின் பிடிகள் நீங்கி
ஆறுமுகனே அருள் புரிவாய் என்று
ஆணைமுகனின் தம்பியைக் கேட்டேன்
ஆதவனின் அருளை கேட்டேன்
-----------------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment