கவிதை எழுதிடும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
உன்னை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடியே
தேய்ந்து போனேன் நான்
தேடி எடுத்தே தொடுத்தேன்
எதுகையும் மோனையுமாய்
சந்தம் சிதறாமல் பிறந்ததாலே
என் தேய்மானம் சரியாகி போனதே
காதலிக்கும் போதே என்னில் பிறந்தது
கவிதை மேல் காதல் வந்தது,
அழகுத் தமிழாய் ஊற்றெடுத்தது
உன் மீது
பாமாலையாய் வந்து விழுந்தது
இலக்கணங்கள் தெரியவில்லை
என்ன எழுதுவது அறியவில்லை
எழுத தொடங்கினேன்
சிந்தனையில் உதித்த வரிகளாலே
புதுக்கவிதை ஆகி போனதே அதுவே
மலரைப் பார்த்தேன்
மயங்கி எழுதினேன்
மாதுவை பார்த்தேன்
காதலாகி எழுதினேன்
மழையைப் பார்த்தேன்
பயணத்தை எழுதினேன்
குயிலை பார்த்தேன்
கானா எழுதினேன்
மயிலை பார்த்தேன்
மல்லிகையாய் சூடினேன்
இயற்கையைப் பார்த்தேன்
ரசித்து எழுதினேன்
கவிதையைப் பார்த்தேன்
கவிதை எழுதிடும்
கவிதையை ரசித்தேன்
---------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment