Monday, 9 October 2017

தாய்க்குப் பின் தாரம்

தாய்க்குப் பின் தாரம்
----------------------------------
பெற்றெடுத்தாள் தாய்
பத்து மாதம் சுமந்தே
தாலாட்டி, சீராட்டி வளர்த்தெடுத்தாள்
நல்ல மனைவியை
கண்டெடுத்தே கட்டி வைத்தாள்,

தாய்க்குப் பின் தாரமாய்
ஆணுக்கு சொந்தமாய்,
இரண்டாவது பெண் அவள்
மனைவியாய் அமைந்திட்டாள்,

வாழ்க்கை என்னவென்று
புரிய வைத்தாள்,
முழு மனிதனாய் உணர வைத்தாள்,
ஆண் மகனாய் நான் வாழ
என்னுள் சரிபாதியாய் கலந்திட்டாள்,

இன்பம் துன்பங்களில்
உடன் பங்கெடுப்பவள்
நோய் என்று வந்திட்டால்
தனக்கே வந்ததாய்
தன்னையே வருத்திக் கொள்வாள்,

கண்ணின் பார்வைதனையறிந்து
தேவைதனை செய்திடும் சேவகி,
அவள் வெளியுலகிற்கோ கண்ணகி
படுக்கையறையிலோ மாதவி
தாய்க் கூட பத்து மாதமே சுமந்தாள்,
ஆயுள் முழுவதும்
தன் நெஞ்சில்
கணவனை குழந்தையாய் சுமப்பவள்
தாய்க்குப் பின் தாரம்
கணவனுக்கு கிடைத்த மற்றொரு தாய்
_______________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment