Monday, 9 October 2017

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை
- - - - - - - - - - - - - - - - - -
பிறந்தது முதல் வாழ்வது வரை
நினைத்துப் பாரடா
நீ நடந்து வந்த பாதையிருக்க
உன் பின்னால் நீயும்
திரும்பிப் பாரடா
கற்கள் உண்டு, முட்கள் உண்டு
பாதாள குழிகள் உண்டு
மேடு பள்ளங்கள் உண்டு
எதையும் பார்க்கவில்லை
கடந்து விட்டாய்
வெற்றி என்ற இலக்கை அடைந்து விட்டாய்
கடக்க முடியாத கடல் உண்டு
எதிர்நீச்சல் போட்டு நீந்தினாய்
நடக்க முடியாத மணல் உண்டு
நடந்தே நீயும் கடந்தாய்
எதிரே வந்த புயல்களும் அடங்கின
உன் வீராப்பை பார்த்து
தேடி வந்த விஷ உயிரிகளும்
சிதறி ஓடின
உன் தன்னம்பிக்கையைப் பார்த்து
உனக்கு முன்னால் இருந்த
சதி வலைகள்
உடைந்து சுக்கு நூறாகியது
உன் மன தைரியத்தைப் பார்த்து
நீ கடக்க வேண்டிய வெற்றிகள் பல உண்டு
தேடி நீயும் ஓடு
நீ கடந்து வந்த பாதை சிறியது
நீ கடக்கப் போகும் பாதையோ
மிகப் பெரியது
வசை சொற்களை கேட்காதே
புகழ் மாலைக்கு மயங்காதே
உன்னை பார்த்தே
இவ்வுலகம் வாழ
வழியை காட்டிட சென்று விடு
பாதையை நீயே அமைத்துக்கொடு
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment