Monday, 9 October 2017

பிரிந்து விடாதே இறந்து விடுவேன்

பிரிந்து விடாதே இறந்து விடுவேன்
--------------------------------------------------------
தாயை கண்டதில்லை நான்
அன்பை அறிந்தவன் இல்லை
உறுவுகள் வெறுத்து ஒதுக்கியவன் நான்
பாசத்தை அனுபவித்தவன் இல்லை

தாயாக வந்தாய்
அன்பை முழுதாய் ஊட்டினாய்
தோள் சாய தோழியானாய்
பாசத்தை பன்மடங்கு  ஊட்டினாய்
உறவாய் தெரிந்தாய்
என் உயிரில் கலந்தாய்

மனிதனாய் உணரச் செய்தாய்
குழந்தையாய் கொஞ்சிட செய்தாய்
இதயத்தில் நங்கூரமாய் அமர்ந்தாய்
வாழ்க்கையில் ஒளிர்ந்திட வந்தாய்

வாழ்வில் சுடராய் வந்தவளே
ஒளியை அணைத்திடாதே
என்னை விட்டு பிரிந்து விடாதே
உடன் இறந்து விடுவேன்
-----------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment