Monday, 9 October 2017

என்னருகில் நீயிருந்தாய்

என்னருகில் நீ இருந்தால்
____________________________
என்னருகில் நீ இருந்தால்
அந்த வானமும் எனக்கு வசப்படும்
சிகரத்தை அடைந்திடும் துணிவிருக்கும்
கடலை கடந்திடும் நெஞ்சமிருக்கும்
மலையை தாண்டும் சக்தி கிடைக்கும்

மனதில் பூ பூக்கும்
கண்களில் தெளிவு பிறக்கும்
உன்னுடன் நான் இருக்கும் தருணம்
அந்த இறைவன் ஆளும்
அரியாசனமும் கிடைத்துவிடும்
காதல் ததும்பும் பார்வை ஒன்றே போதும்
உலகையும் சிறை வைப்பேன்

என்னுடன் நீ இருக்கும் தருணம்
இரவுக்கூட பகலாய் தெரிய
நிலவோ சூரியனாய் தகதகக்க
பனிக்காலமும் கோடையாய் மாறியதடி
நெஞ்மெல்லாம் துடிதுடிக்குதடி
நாடி நரம்பும் புடைக்குதடி,

ஆசையாய் முத்தம் ஒன்று கொடுத்தாய்
பிறவி பலனை அடைந்தேனடி,
கட்டி தழுவினாய்
தாயாக உணர்ந்தேன்
கொஞ்சிப் பேசினாய்
குழந்தையாய் நான் உணர்ந்தேன்
நீ என்னருகில் இருக்க
அனைத்து உறவும் என்னுடன்
இருப்பதாய் உணர்கிறேன்
என் உணர்வில்
கலந்த என் நாயகியே
__________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment