Monday, 9 October 2017

வீணை தனை வாசித்தேன்

வீணை தனை வாசித்தேன்
விழிகளில் யாசித்தேன்
----------------------------------
வீணை தனை வாசித்தேன்
விழிகளில் யாசித்தேன்
உயிராய் சுவாசித்தேன்
உன்னை மட்டுமே நேசித்தேன்

காதல் கவிதை வாசித்தேன்
யாழ் மீட்டி பாடினேன்
உன்னையே நினைத்திருந்தேன்
நினைத்திட மறக்க மாட்டேன்

சொற்களை தேடினேன்
கவிதையாய் உன்னை வடிக்கின்றேன்,
வார்த்தைகளை சூடினேன்
பாமாலை நான் வடித்தேன்

நான் காதல் கொண்ட அழகி நீ
பிரம்மன் படைத்த சுந்தரி நீ
குபேரனின் தங்க மகளோ நீ
தேவலோக தேவியோ நீ

உன் நினைவில் வாசம் கொண்டேன்
கூந்தல் மணமதில் மயங்கிவிட்டேன்
உன் முகமதில் உறைந்து போனேன்
உன் தூய்மை அன்பில் மெய் மறந்தேன்

நினைத்தாலும் உன் நினைவோடு
வாழ்ந்தாலும் நான் உன்னோடு
மாண்டாலும் நீ என்னோடு
விழிகளில் வைத்தே யாசித்திடுவேன்
------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment