Monday, 9 October 2017

விழி சொல்லும் வழி

விழி சொல்லும் வழி
- - - - - - - - - - - - - - - - -
விழி சொல்லும் வழியில்
பயணத்தை தொடர்கிறேன் நான்
விழியின்றி காட்சிகள் இல்லை
நீயின்றி நானும்  உண்டோ

வானம் இன்றி சந்திரன் இல்லை
உன் முகம் இன்றி விழிகள் உண்டோ
காட்சிகள் இன்றி கானமும் இல்லை
கவிதைகள் இன்றி தமிழும் உண்டோ

தவழும் குழந்தைகள் விரும்பிடும்
பறக்கும் பறவைகள் அயர்ந்திடும்
தூங்கும் உயிர்கள் எழுந்திடும்
கூவும் குயிலும் பாடிடும்

ஆடும் மயிலும் மயங்கிடும்
மலர்களும் நாணம் கொண்டிடும்
தென்றலும் தானாய் நின்றிடும்
பார்க்கும் பார்வையில் விழுந்திடும்
உன் பார்வை மட்டும் போதுமே
எல்லாம் தலைகீழாய் மாறிடுமே

வட்ட முகமோ உன் முகம்
என்ன பார்வை பார்த்திட்டாய்
பௌர்ணமி நிலவாய் ஒளிர்கிறாய்
அமாவாசை இருளில் வாழ்ந்தேனே

தறிக்கெட்டு சென்ற என் வாழ்விலே
தானாய் வந்த செண்பகமே
இருளை நீக்கி ஒளி வீசினாய்
உன் விழி சொல்லும் வழியில்
செல்கிறேன் நானும்
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

உன்னாலே ஒளிரும் அந்த நிலவும்
தான் செல்லும் பாதையை மறந்ததோ
நீ விரும்பினாய் என்றே
உன்னைச் சுற்றியே வருகிறதே!
உன் விழி சொல்லும் வழியில் செல்கிறதோ

No comments:

Post a Comment