நாற்காலிக் கனவுகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நினைத்ததை முடிப்பவன்
நல்லதை செய்பவன்
கடமையை செய்பவன்
கண்ணியம் தவறாதவன்
கட்டுப்பாட்டில் வாழ்பவன்
என்னை ஆட்சி செய்தால்
எனக்கே பெருமை
ஊழலே குறிக்கோளாய்
பணம் மட்டுமே வாழ்க்கையாய்
மக்கள் நலம் பேணாதவனாய்
சொத்து சேர்ப்பவனாய்
சொந்தங்கள் நலன் விரும்பியாய்
சுயநலக்காரனாய்
வந்து அமர்ந்தால்
எனக்கோ அவமரியாதை
சினிமா நடிகரும்
ஊழலில் பெருத்தவரும்
பணத்தில் புரண்டவரும்
தீங்குகள் பல செய்தவரும்
ஈவு இரக்கம் அற்றவரும்
என்னை ஆள நினைப்பதோ
என் கனவை சிதைப்பதாகாதா
பதவி தேடி வர வேண்டும்
நாடி வர வேண்டும்
அதனை மறுப்பவரிடமே
நான் கிடைக்க வேண்டும்
எனக்கு மட்டுமா பெருமை
நாட்டிற்கே பெருமை
மக்களே
எனக்கும், உங்களுக்கும்
வேண்டியவன் யாரென்றே
கனவு கண்டு கூறிவிட்டேன் நானே
மாற்றம் உங்கள் கையில்
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment